நாகை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வாய்மேடு
நாகை மாவட்டம் வாய்மேடு, தகட்டூர், தென்னடார், மருதூர், ஆயக்காரன்புலம், தாணிக்கோட்டகம், அண்ணாப்பேட்டை, தலைஞாயிறு, உம்பளச்சேரி, துளசாபுரம், மணக்குடி, வாட்டாகுடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று கீழ்வேளூர், தேவூர், வெண்மணி, காக்கழனி, ஆந்தக்குடி, சிகார், ஆதமங்கலம், வடக்காலத்தூர், பட்டமங்கலம், இலுப்பூர், கூத்தூர், நீலப்பாடி, குருமனாங்குடி, ஒர்குடி, ஒக்கூர், வெங்கிடங்கால், ஆவராணி, புதுச்சேரி, ஆழியூர், சிக்கல், பொரவச்சேரி-சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்கல் கடைவீதி மற்றும் கீழ்வேளூர் கடைவீதியில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு செல்லும் பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நாகூர்
நாகூரில் நேற்றுமுன்தினம் இரவு பரவலாக மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலை குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து தெத்தி, வடகுடி, முட்டம், மேலநாகூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.