குமரியில் பலத்த மழை;சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2022-10-29 18:35 GMT

நாகா்கோவில், 

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நாளை (திங்கட்கிழமை) முதல் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு குமரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, கொட்டாரம், சாமிதோப்பு, கன்னியாகுமரி, மார்த்தாண்டம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை கொட்டியது.

நாகர்கோவிலில் இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 30 நிமிடம் கனமழையாக பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சாலை முழுவதும் தண்ணீர்

அந்த வகையில் செம்மாங்குடி ரோடு, அவ்வை சண்முகம் சாலை, கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, கேப் ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை என அனைத்து சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மழை நீர் சுமார் 2 அடி அளவுக்கு தேங்கி மெல்ல மெல்ல வடிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

மேலும் பல சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதை காணமுடிந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்