குன்னூாில் பலத்த மழை

குன்னூாில் பலத்த மழை

Update: 2023-06-08 10:55 GMT

ஊட்டி

ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக பந்தலூரில் பெய்த மழை காரணமான ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து உள்ளன. இந்தநிலையி்ல் நேற்று காலை முதல் மதியம் வரை குன்னூரில் வெயில் அடித்தது. மதியத்திற்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் வெளுத்து வாங்கியது. பின்னர் சாரல் மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி இயற்கை அழகுகளை ரசித்தனர். இந்த மழை மாலை வரை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்