கடலோர பகுதிகளில் பலத்த மழை; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்களின் விலை உயர்ந்தது.

Update: 2022-11-12 18:38 GMT

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோரப்பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் இப்பகுதியில் மீன்கள் வரத்து குறைந்துள்ளது.

இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் சுற்று வட்டார பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்