சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை... மழை நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்
சென்னை புறநகர் பகுதியில் பெய்த பலத்த மழையில் சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கின.
சென்னை,
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் ஓடியது.
மேலும், இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஏராளமான சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கின. வெள்ள நீரில் மூழ்கிய சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.