சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை...!

சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

Update: 2022-11-01 03:12 GMT

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டு தாங்கல் சைதாப்பேட்டை கிண்டி, திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. அதைபோல சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கும் மேல் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்