அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்தும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். இந்த நிலையில் அரியலூர் பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீச தொடங்கியது. இதைத்தொடர்ந்து இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டு வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.