அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் நகர்ப்பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் மழைநீருடன் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. தொடர்ந்து இரவு நேரத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- அரியலூர்-25.2, திருமானூர்-66.8, ஜெயங்கொண்டம்-20, செந்துறை-42, ஆண்டிமடம்-11.