அரிமளம், காரையூர், திருவரங்குளம் பகுதிகளில் பலத்த மழை

அரிமளம், காரையூர், திருவரங்குளம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Update: 2023-08-08 19:24 GMT

அரிமளம் ஒன்றியத்தில் கடையக்குடி, வன்னியம்பட்டி, மிரட்டுநிலை, ஓணாங்குடி, அரிமளம், ராயவரம், கடியாபட்டி, மேல்நிலைப்பட்டி, நெடுங்குடி, ஆணைவாரி, கீழாநிலைக்கோட்டை, கே.புதுப்பட்டி, ஏம்பல், வாளறமாணிக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. ஆங்காங்கே இருந்த குளங்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காரையூர் சுற்றுவட்டார பகுதியான மேலத்தானியம், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஒளியமங்கலம், சடையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை, நல்லூர், காரையூர் உள்பட சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழைபெய்தது. இதனால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவரங்குளம் வட்டார பகுதியில் நேற்று மாலை 6 மணிக்கு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

Tags:    

மேலும் செய்திகள்