அரவக்குறிச்சி-நொய்யல் பகுதிகளில் பலத்த மழை

அரவக்குறிச்சி-நொய்யல் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Update: 2023-05-11 19:16 GMT

அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை பலத்த மழை பெய்ததது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.

இதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், கூலி தொழிலாளர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். மேலும், இந்த மழையின் காரணமாக புகழூர் நகராட்சி பகுதியில் நேற்று மாலை நடந்த வாரச்சந்தையில் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் சிரமம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்