சேத்தூர் பகுதியில் ஒரு மணி நேரம் கனமழை

சேத்தூர் பகுதியில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது

Update: 2023-08-23 19:15 GMT

ராஜபாளையம்.

ராஜபாளையம் அருகே சேத்தூர், செட்டியார்பட்டி, தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம், ஆகிய பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்று வீசி கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரம் வரை நீடித்தது. கனமழையால் செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் தெருவில் வாருகால் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கி இருந்தன.

அதேபோல புத்தூர், புனல்வேலி, முகவூர், தேவதானம், கோவிலூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்