திருமக்கோட்டையில் 2 மணிநேரம் பலத்த மழை
திருமக்கோட்டையில் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.
ிருமக்கோட்டையில் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.
2 மணிநேரம் பலத்த மழை
திருமக்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2 மணி அளவில் திருமக்கோட்டை மற்றும் வல்லூர், மான்கோட்டைநத்தம், தச்சன் வயல், ராதாநரசிம்மபுரம், பைங்காநாடு, ராஜகோபாலபுரம், தென்பரை, பாளையக்கோட்டை, பரசபுரம், பாலையூர்நத்தம், கோவிந்தநத்தம், மேலநத்தம், கன்னியாகுறிச்சி, எளவனூர், பாவாஜிக்கோட்டை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை 4 மணி வரை நீடித்தது.
குறுவை அறுவடை பணி பாதிப்பு
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் சம்பா நடவு பணிகளும், குறுவை அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.