தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வரும் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.