தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-12-04 04:35 GMT

Photo Credit: PTI

சென்னை,

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகரக்கூடும்.

இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. 7 ஆம் தேதி கனமழையும், 8 ஆம் தேதி மிகக் கனமழையும் பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்