தமிழகத்தில் தொடர்மழை எதிரொலி: தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையையொட்டி, டி.ஜி.பி. அலுவலகத்தில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை உள்ளது. அதுதவிர சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.

Update: 2022-11-11 23:56 GMT

சென்னை,

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையையொட்டி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாநில பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்கள், சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளில் மீட்பு பணியில் ஈடுபட போலீஸ் நீச்சல் வீரர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் 30 பேர் முகாமிட்டுள்ளனர்.

டி.ஜி.பி. உத்தரவு

மேலும் மெரைன் கமாண்டோ பிரிவைச் சேர்ந்த 60 நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள். கடலோர மாவட்டங்களில் மீனவர்களும் படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர். மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில், தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்