கம்பத்தில் பலத்த மழை

கம்பத்தில் நேற்று பலத்த மழை பெய்தது.

Update: 2023-05-30 18:45 GMT

கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அவதி அடைந்து வந்தனர். மேலும் மானாவாரி நிலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகி வந்தன. இந்நிலையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கடமலைக்குண்டு பகுதியிலும் சாரல் மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்