மயிலாடுதுறை மாவட்டங்களில் இரவில் பலத்த மழை
மயிலாடுதுறை மாவட்டங்களில் இரவில் பலத்த மழை செய்தது
திருக்கடையூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருக்கடையூர், ஆக்கூர் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல பிள்ளை பெருமாள்நல்லூர், டி.மணல்மேடு, கன்னங்குடி, கிள்ளியூர், நட்சத்திரமலை, காடுவெட்டி, நடுவலூர், ரவணயன்கோட்டகம், வளையல் சோழகன், சீவகசிந்தாமணி, சரோஜராஜபுரம், அபிஷேக கட்டளை, பிச்சகட்டளை,மாமாகுடி, மருதம்பள்ளம், காலமநல்லூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.