200 ஏக்கரில் வாழை மரங்கள் சேதம்

200 ஏக்கரில் வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

Update: 2022-11-12 19:00 GMT

தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றத்தால் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. டேனிஷ் கோட்டை பகுதியில் கடல் சீற்றமாக உள்ளதால் கடல் நீரும் மழை நீரும் கோட்டை முன்புதேங்கி நிற்கிறது. தரங்கம்பாடி தாலுகாவில் 18 செ.மீ. கனமழை பெய்தது. இதன் காரணமாக 200 ஏக்கரில் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. ஒரு வாரமாக வாழைகள் தண்ணீரிலேயே இருப்பதால் இலை குருத்துகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்