தந்தை திட்டியதால் மனம் உடைந்த 10-ம் வகுப்பு மாணவி

ஓமலூர் அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்தது குறித்து தந்தை திட்டியதால் மனம் உடைந்த10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்துதற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-09-04 20:08 GMT

ஓமலூர்:-

ஓமலூர் அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்தது குறித்து தந்தை திட்டியதால் மனம் உடைந்த10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்துதற்கொலை செய்துகொண்டார்.

10-ம் வகுப்பு மாணவி

ஓமலூர் அடுத்த காமலாபுரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் தீபிகா (வயது 15). காமலாபுரம் பிரிவு ரோடு அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் மாணவி தீபிகா, சமீபத்தில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதாக அவருடைய தந்தை ரமேஷ் திட்டியதாக தெரிகிறது.

இதனால் கடந்த மாதம் 24-ந் தேதி காலையில் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டுஉள்ளார்.

சாவு

இதில் மயங்கி கிடந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மாணவி தீபிகா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்