சுகாதார திட்ட விளக்க கூட்டம்

செங்குளம் பள்ளியில் சுகாதார திட்ட விளக்க கூட்டம் நடந்தது.

Update: 2023-07-22 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டிவிஎஸ்.ஸ்ரீனீவாசன் சேவை அறக்கட்டளை இணைந்து செங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுகாதார நிலையம், குழந்தைகளுக்கான சுகாதார திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயராணி எலிசபெத் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், அறக்கட்டளை பணியாளர்கள் சுவேதா, இசக்கிமுத்து முத்துகிருஷ்ணன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு தன்சுத்தம், கை கழுவும் முறை, குழந்தைகளுக்கான சுகாதார திட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.

இதேபோல் புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் குழந்தைகளுக்கான சுகாதார திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்