சிவகங்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை - 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
சோதனையின் போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் நேரு பஜார், அரண்மனைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உணவுத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 200 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், புகையிலைகள், சுமார் 20 கிலோ கெட்டுப்போன சிக்கன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பந்தபட்ட கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனிடையே நேரு பஜாரில் நடந்த சோதனையின் போது சில கடைகளில் மட்டுமே அதிகாரிகள் சோதனை செய்ததாக வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.