ஜாமீன் கோருவதற்கு உடல் நிலையை ஒரு காரணமாக கூற முடியாது- செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை வாதம்

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் இருந்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

Update: 2023-09-15 14:14 GMT

சென்னை,

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபில் ஆஜராகி வாதாடினார். இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதாடினார்.

அவர் வாதாடும்போது கூறியதாவது:-

சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நிராகரித்துள்ளது.

இந்த முறைகேடு இடைத்தரகர்கள் மூலம் நடந்துள்ளது. பணம் கொடுத்த சிலருக்கு வேலை கிடைத்துள்ளது. சிலருக்கு வேலை கிடைக்கவில்லைகுற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தான் தவறு செய்யவில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

செந்தில்பாலாஜி இன்னும் அமைச்சராக உள்ளார். அவர் சக்தி வாய்ந்த நபராக இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. ஜாமீன் கோருவதற்கு உடல் நிலையை ஒரு காரணமாக கூற முடியாது.அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் 2½ ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களும் உள்ளனர். அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.இவ்வாறு ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்