செம்பட்டி அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி; தலைமை பொறியாளர் ஆய்வு
செம்பட்டி அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
கொடைரோடு அருகே உள்ள மெட்டூரில் இருந்து செம்பட்டி, பழக்கனூத்து வழியாக ஒட்டன்சத்திரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மெட்டூர் முதல் கன்னிவாடி வரை நடைபெறுகிற நான்கு வழிச்சாலை திட்டப்பணியை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் (சென்னை) ரா.சந்திரசேகர் நேற்று ஆய்வு செய்தார்.
செம்பட்டி அருகே காமுபிள்ளைசத்திரம் என்ற இடத்தில் ஆய்வு செய்த தலைமைப்பொறியாளர், பணிகளை விரைந்து முடிக்கவும், உரிய சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ப.மாரிமுத்துராஜன், கட்டுமான மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் ரா.பரணிதரன், தரக்கட்டுப்பாடு எ.ஞானமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர்கள் கண்ணன், வீரன் மற்றும் உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.