குளிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி சாவு

குளிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி இறந்தார்.

Update: 2022-07-02 18:57 GMT

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை திலகர் நகரை சேர்ந்தவர் உத்திராபதி(வயது 40). இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். உத்திராபதி நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) வேலுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களை, அவரது உறவினர்கள் தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார், உறவினர்களிடம் பிரேத பரிசோதனை செய்த பின்னர்தான் உடல் ஒப்படைக்கப்படும் என்று கூறியும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாகனத்தை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நள்ளிரவில் உத்தராவதியின் உடலை போலீசார் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்