தண்ணீர் என மாடுகளுக்கான மருந்தை குடித்தவர் சாவு

தண்ணீர் என மாடுகளுக்கான மருந்தை குடித்தவர் உயிரிழந்தார்.

Update: 2023-07-03 18:45 GMT

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அடுத்தகுடி கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மாட்டு வண்டி உரிமையாளரான சிவகங்கை மாவட்டம் வெளிமுத்தியை சேர்ந்த இளங்கோ(வயது 55) சென்றார்.

இதையொட்டி அவர், வண்டி மாடுகளுக்கு காலில் தெளிக்கக்கூடிய மருந்தை எடுத்துச் சென்று இருந்தார். தவறுதலாக தண்ணீர் என நினைத்து அந்த மருந்தை அவர் குடித்துள்ளார்.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோ உயிரிழந்தார். இது குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்