போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் இன்ஸ்பெக்டர்
ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சாந்தகுமாரி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் மதுரை மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி ஆலங்குளத்திற்கு வந்தார்.
சாந்தகுமாரிக்கு ஏற்கனவே ஏற்பட்ட விபத்தால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது.
விஷம் குடித்தார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சாந்தகுமாரி பணியில் இருந்தார். அப்போது, கழிப்பறைக்கு சென்ற அவர் விஷம் குடித்துவிட்டு வெளியே வந்ததாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் சாந்தகுமாரி போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் ேமல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
காரணம் என்ன?
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாந்தகுமாரி மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் இதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய போது, கொசு மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஆலங்குளத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.