மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த தந்தையை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த தந்தையை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-17 21:33 GMT


மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 55). இவரது மகன் பொன்முத்து செல்வம்(24). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது குடிக்க இவர் தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு பொன்னுசாமி பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அதில் ஆத்திரமடைந்த பொன்முத்து செல்வம் தந்தையை பீர் பாட்டிலால் தாக்கினார். இதுகுறித்து கீரைத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்முத்து செல்வத்தை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்