கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தவர் சாவு

கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தவர் இறந்தது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-04 18:18 GMT

ஜோலார்பேட்டை

கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தவர்  இறந்தது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலைய 2-வது பிளாட்பாரத்தில் சென்னையிலிருந்து கோவை நோக்கி செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தடைந்தது அப்போது பின்னால் பொது பெட்டியில் சுயநினைவு இல்லாமல் ஒருவர் மயங்கி கிடப்பதாக பயணிகள் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது 70 வயது நபர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழே இறக்கினர். ரெயில்வே மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்