ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டுக்கு வந்தமனைவியை அடித்து உதைத்த ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்கு
ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டுக்கு வந்த மனைவியை அடித்து உதைத்த ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பவானி
ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டுக்கு வந்த மனைவியை அடித்து உதைத்த ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ்
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த பூனாச்சி முளியனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் ஈரோடு ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி செண்பகம் (28). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக சுரேசை விட்டு பிரிந்து செண்பகம் பவானியை அடுத்த பருவாச்சி கோட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்து உள்ளார்.
ஜீவனாம்சம் கேட்டு...
2 பேரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சுரேசிடம் ஜீவனாம்சம் கேட்டு பவானி கோர்ட்டில் செண்பகம் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணைக்காக செண்பகம், பவானி கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அவர் நீதிபதியிடம் தனது கணவர் சுரேஷ், பார்க்கும் இடத்தில் எல்லாம் தன்னை மிரட்டுவதாக புகார் தெரிவித்தார்.
அடி- உதை
இதையடுத்து சிறிது நேரத்தில் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்த சுரேஷ், அங்கு நின்று கொண்டிருந்த செண்பகத்திடம் பேசியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் சுரேஷ் ஆத்திரம் அடைந்து செண்பகத்தை அடித்து உதைத்ததாக தெரிகிறது. மேலும் செண்பகத்தின் தந்தை பெருமாளையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சுரேஷ் மீது பவானி போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.