பரவலாக மழை; சம்பா அறுவடை பணிகள் பாதிப்பு
கூத்தாநல்லூர், திருமக்கோட்டையில் பரவலாக மழை பெய்தது. சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.
கூத்தாநல்லூர், திருமக்கோட்டையில் பரவலாக மழை பெய்தது. சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.
கூத்தாநல்லூர்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் நேற்று முன் தினம் சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து நேற்று முழுவதும் இடை இடையே பரவலாக மழை பெய்தது.
தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில் மழை பெய்ததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது அப்பகுதி விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.
நேற்று நாள் முழுவதும் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு, மழை அச்சுறுத்தல் நீடித்தது. நேற்றும் 2-வது நாளாக பரவலாக மழை பெய்ததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டதுடன், மகசூல் இழப்பு ஏற்படுமோ? என்ற கவலை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்தன. ஏற்கனவே அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாடு உள்ளதால் அறுவடை பணிகள் தாமதமாகும் சூழல் உள்ள நிலையில் மழை பெய்து இருப்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மேலும் இந்த சாரல் மழை காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.