திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில்'ஹாப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் நடந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நடனமாடி மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் நடந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நடனமாடி மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் 'ஹாப்பி ஸ்ட்ரீட்' (மகிழ்ச்சி வீதி) இனி கவலை இல்லை என்ற தலைப்பில் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பசுமையை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், பறை இசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதேபோல் சிலம்பாட்டம், யோகா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை நிரூபித்துக் காட்டினர்.
அதுமட்டுமின்றி வெஸ்டர்ன் டான்ஸ் மற்றும் பாட்டு கச்சேரிகளும் சிறப்பாக நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது கவலைகளை மறந்து, ஆட்டம் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.
இதனையொட்டி திருவண்ணாமலை நகர போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.