என்றென்றும் தல தோனி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தோனிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-07 04:23 GMT

சென்னை,

கேப்டன் கூல் என்றும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும் உலகத்தால் போற்றப்படும் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், என்றென்றும் சி.எஸ்.கே.வின் தல எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு உங்கள் சாதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் சாதனைகள் எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னிகரற்ற தலைமை பண்பால் அனைவருக்கு ஊக்கம் அளிக்க தோனி தனது பணியை தொடர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்