அனைத்து போலீஸ் நிலையங்க ளிலும் நடந்தசிறப்பு போலீஸ் விசாரணை முகாமில் 521 மனுக்களுக்கு தீர்வு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்க ளிலும் நடந்த சிறப்பு போலீஸ் விசாரணை முகாமில் 521 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நடந்த சிறப்பு போலீஸ் விசாரணை முகாமில் 521 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
சிறப்பு விசாரணை முகாம்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகளின் மேற்பார்வையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மனுக்கள் மீதான விசாரணை சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருந்த 657 மனுக்கள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் மனுக்கள் மீது துரித விசாரணை மேற்கொண்டனர்.
மனுக்களுக்கு தீர்வு
இந்த வகையில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 81 மனுக்கள் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 97 மனுக்களும், திருச்செந்தூரில் 46 மனுக்களும், ஸ்ரீவைகுண்டத்தில் 78 மனுக்களுக்கும், மணியாச்சியில் 43 மனுக்களுக்கும், கோவில்பட்டியில் 54 மனுக்களுக்கும், விளாத்திக்குளத்தில் 61 மனுக்களுக்கும், சாத்தான்குளத்தில் 61 மனுக்களுக்கும் ஆக மொத்தம் 521 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.