தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

விழுப்புரத்தில், கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Update: 2023-06-01 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ்(வயது 46). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஹரிதாஸ் அக்கம், பக்கத்தில் அதிக அளவு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனை அடைக்க முடியாத விரக்தியில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்