தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

புதுப்பேட்டை அருகே மதுகுடிக்க தாய் பணம் கொடுக்காததால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-29 19:29 GMT

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே திருத்துறையூரை சேர்ந்தவர் துளசிங்கம். இவரது மகன் மணிகண்டன் (வயது 25). கூலி தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் மது குடிக்க தனது தாயிடம் மணிகண்டன் பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்க அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மணிகண்டன் அதே பகுதியில் உள்ள அய்யனார் கோவில் பகுதியில் உள்ள புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து துளசிங்கம் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுகுடிக்க தாய் பணம் கொடுக்காததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்