தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

சாயல்குடி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-08 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே குதிரை மொழி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் உலகு மணி (வயது 26). இவருக்கு கண் சரியாக தெரியாது.இவரது பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர். யாரும் இவரை பனைத் தொழிலுக்கு கூப்பிடாத காரணத்தினால் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்