தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் தூக்குப்போட்டு ெதாழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் அருகே உள்ள கே.செவல்பட்டியை சேர்ந்தவர் முத்து முனியாண்டி (வயது 34). இவரது மனைவி லட்சுமி (24). இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவரின் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தினர். லட்சுமி தனியார் நிறுவனத்திலும், முத்து முனியாண்டி கட்டிட வேலையும் செய்து வந்தார். இந்நிலையில் முத்து முனியாண்டி மது பழக்கத்திற்கு அடிமையான நிலையில் லட்சுமி அவரை கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு வீட்டு சமையல் அறையில் முத்து முனியாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.