தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

போடியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-29 18:45 GMT

போடி வினோபாஜி காலனியை சேர்ந்தவர் ஆனந்த குமார் (வயது 24). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (22). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சித்ரா அவரை கண்டித்தார். இந்நிலையில் நேற்று ஆனந்தகுமார் அதே பகுதியில் உள்ள தனது தந்தை வீ்ட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்