தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் அரசு காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 45), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகாததால் விரக்தியில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு முருகன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இந்த சம்பவம் குறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.