தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

ஆம்பூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-06 18:53 GMT

ஆம்பூர்

ஆம்பூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்பூரை அடுத்த கைலாசகிரி பகுதியை சேர்ந்தவர் அமீன் ஷெரிப் (வயது 29). இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் கைலாச கிரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த அமீன் ஷெரிப் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உமாராபாத் போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்