தஞ்சை வெட்டுக்கார தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சீனிவானின் சகோதரர் சரவணன் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.