தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வாகன விபத்தில் வெங்கடேசன் வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வேலைக்கு செல்லாமல் வெங்கடேசன் வீட்டிலேயே தனது குழந்தையை பார்த்துக் கொண்டு வந்துள்ளார். மனைவி இறந்த சோகத்தில் இருந்த வெங்கடேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.