தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-10 18:48 GMT

 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கரூர் செல்லாண்டி பாளையத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லாமல் அவர் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்