தூக்குப்போட்டு கைதி தற்கொலை

தூக்குப்போட்டு கைதி தற்கொலை

Update: 2022-10-08 18:45 GMT

மனைவியை கொலை செய்த வழக்கில் கைதானவர் நாகை மாவட்ட சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கைதி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதிரிவேலூர் பாலூரான் படுகை பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது30). இவர் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் அணைக்காரசத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 23-ந் தேதி நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று மதியம் செந்தில் சாப்பிடுவதற்காக உணவு வாங்கி கொண்டு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் தான் அணிந்திருந்த கைலியில் சிறையில் உள்ள ஜன்னலில் தூக்குப்போட்டு கொண்டார்.

தற்கொலை

இதைபார்த்ததும் அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், செந்திலை மீட்டு உடனடியாக நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே செந்தில் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்