விக்கிரவாண்டி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய அ.தி.மு.க. கிளைசெயலாளர் காரணம் என்ன? போலீஸ் விசாரணை
விக்கிரவாண்டி அருகே தூக்கில் அ.தி.மு.க. கிளை செயலாளர் பிணமாக தொங்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த தொரவி காலனியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 53). அ.தி.மு.க. கிளை செயலாளர் ஆவார். இவரது மனைவி கஸ்தூரி. நேற்று முன்தினம் பனப்பாக்கம் பகுதியில் உள்ள ஆலமரத்தில் தனது வேட்டியால் குணசேகரன் தூக்குப்போட்டு கொண்டார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காரணம் என்ன?துகுறித்து கஸ்தூரி, விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குணசேகரன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.