தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

Update: 2023-05-26 19:30 GMT

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த ரமணமுதலிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம்(வயது 29). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கீதா(26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் ஹக்கீம் கடந்த சில நாட்களாக அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதோடு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது இருசக்கர வாகனத்தை அடமானம் வைத்ததாக தெரிகிறது. அதை திருப்ப முடியாமல் மன உளைச்சலில் இருந்த ஹக்கீம், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்