தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 45). இவரது மகன் கருப்புராஜா (23). டிரைவர். இவரது மனைவி மாலதி கருத்து வேறுபாடு காரணமாக 1½ வயது ஆண் குழந்தையுடன் இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த கருப்புராஜா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி காளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.