மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் 6-ந் தேதி தொடங்குகிறது
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்துகிறது. அதன்படி வருகிற 6-ந் தேதி காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வள மையத்திலும், 9-ந் தேதி திருப்பூர் அரண்மனைப்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 10-ந் தேதி தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 11-ந் தேதி உடுமலை தளி ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதுபோல் 12-ந் தேதி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 13-ந் தேதி பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 16-ந் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வளமையத்திலும், 17-ந் தேதி அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 18-ந் தேதி குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 19-ந் தேதி பொங்கலூர் பி.யு.வி.என். தொடக்கப்பள்ளியிலும், 26-ந் தேதி குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 27-ந் தேதி வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 31-ந் தேதி மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அடுத்த மாதம் 1-ந் தேதி திருப்பூர் தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது.
ஒன்றிய அளவில் முகாம் நடைபெற உள்ளதால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் வருகிற 6-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைதோறும் முகாம் நடைபெறும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
---------------