தொலைந்த செல்போன் உரிமையாளரிடம் ஒப்படைப்பு
அவளுரில் தொலைந்த செல்போன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த அவளூர் பகுதியில் நேற்று பெரும்புலிபாக்கம் மேட்டு தெருவை சார்ந்த லோகநாதன் மகன் ஷியாம் குமார் (வயது 20) என்பவர் தனது செல்போனை தவறவிட்டுள்ளார்.
இதையடுத்து தொலைந்த செல்போனை கண்டுபிடித்து தருமாறு அவர் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இந்த நிலையில் இன்று தொலைந்த செல்போன் போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி செல்போனை ஷியாம் குமாரிடம் ஒப்படைத்தார்.