அரூரில் தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம்
இந்தி திணிப்புக்கு எதிராக அரூரில் தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.
அரூர்:
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அரூர் பஸ்நிலையம், கடைவீதி ஆகியவற்றில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன் தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நகர செயலாளர் முல்லை ரவி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சூரியா தனபால், ஒன்றிய செயலாளர்கள் சவுந்தரராசு, சந்திரமோகன், வேடம்மாள் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் மணி, பொருளாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சித்தார்த்தனன், பி.சி.ஆர்.மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வாசுதேவன், கலைவாணி, மாநில நிர்வாகி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் செங்கண்ணன், ரத்தினவேல், முத்துகுமார், சரவணன், பொறுப்பாளர்கள் சுரேஷ்குமார், பழனி, திருவேங்கடம், முகமதுஅலி, தமிழழகன், தென்னரசு, சேகர், விண்ணரசு, கோட்டீஸ்வரன், சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.